/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு ஓரத்தில் குடிநீர் திறக்கும் குழாய்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம் ரோடு ஓரத்தில் குடிநீர் திறக்கும் குழாய்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்
ரோடு ஓரத்தில் குடிநீர் திறக்கும் குழாய்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்
ரோடு ஓரத்தில் குடிநீர் திறக்கும் குழாய்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்
ரோடு ஓரத்தில் குடிநீர் திறக்கும் குழாய்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 02, 2024 03:14 AM

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பட்டேல் ரோட்டில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக குழாய் திறக்கும் இடத்தில் எவ்வித தடுப்புகளும் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பட்டேல் ரோட்டில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக குழாய் திறக்கும் அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு ரோட்டின் உயரத்தில் இருந்து தாழ்வாக இருப்பதால் இதை சுற்றி கான்கீரிட் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த கான்கீரிட் தொட்டியை சுற்றி முறையான தடுப்புகள் எதும் இல்லாமல் இருக்கும் இடம் தெரியாதவாறு புதர்களுக்கு மத்தியில் இருக்கிறது.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலர் ரோட்டின் ஓரத்தில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஓதுங்கி நிற்கும் போது தொட்டியில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே குடிநீர் திறப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.