ADDED : ஆக 06, 2024 04:39 AM

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களுக்கான நுண்கலை போட்டிகள் 'டெக் ஓ பெஸ்ட்' எனும் தலைப்பில் கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடந்தது.
இதில் மாணவர்களின் பரத நாட்டியம், நாட்டுப்பற நடனம், குழு நடனம், பேச்சு, கட்டுரை, ஓவியம், கலைப்பொருட்களை உருவாக்குதல் என பல விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. எழுத்தாளர் கீதாகுமாரி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றுகளை வழங்கினார். கல்லுாரி துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் லுானாயூனிஸ் செய்தார்.