/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள் சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்
சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்
சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்
சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்

வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்
முனியசாமி, விவசாயி: காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் சிறு ஓடைகள் வழியாக வரத்து கால்வாயில் பாய்ந்து கண்மாய்க்கு செல்லும். தற்போது கழிவுநீர் தேங்கி அசுத்தமாகி உள்ளது. குடிநீர் ஆதாரமாக இருக்கும் கண்மாய் பகுதிகளில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. வரத்து கால்வாயை தூர்வாரி கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையில் ரோடு குறுகலாக இருப்பதால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல வழி இன்றி சிரமம் ஏற்படுகிறது. புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்
வில்லியம்ஸ், விவசாயி: 35 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பு இல்லாததால் வீடுகள் சேதம் அடைந்தன. குடியிருக்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறி வேறு கிராமங்களில் குடியேறி வருகின்றனர். வீடுகளை பராமரிக்க வேண்டும். இருக்கிற மக்களுக்கு வசிக்க தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து அச்சம்
ரத்தினம், விவசாயி: மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. சரிவர கட்டாததால் சேதம் அடைந்து நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. சேதமடைந்த மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். வாறுகால் வசதி செய்து தர வேண்டும்.