/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமான சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சேதமான சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
சேதமான சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
சேதமான சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
சேதமான சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ADDED : ஜூலை 14, 2024 04:20 AM

காரியாபட்டி : மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சுகாதார வளாகம் சேதமடைந்து வருவது, ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்ட போது பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்ததுடன், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருவதால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் அரசு துவக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்து வருகிறது. பள்ளத்துப்பட்டி ரோட்டில் இருந்து பிச்சம்பட்டி செல்லும் ரோடு மண் தரையாக இருப்பதால் மழை நேரங்களில் சேறும் சகதியுமாக மாறி ஆட்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
வாகனங்களில் செல்ல முடியவில்லை. ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள வாறுகால் சேதம் அடைந்து மண் மேவி கிடக்கிறது. கழிவு நீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது.
மழை நேரங்களில் முக்கு ரோடு பகுதியில் இருந்து செல்லும் மழை நீர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குளம் போல் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்தன. ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி, சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
அப்படியே கிடப்பில் போட்டுள்ளதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரியாபட்டி பகுதியில் மழை பெய்யும் போது மழை நீர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் குளம் போல் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மழை நீரை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறுமுகம், தனியார் ஊழியர்.
அரசு துவக்கப் பள்ளி அருகில் உள்ள சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கட்டடம் சேதம் அடைந்து வருவதால் மராமத்து பணிகள் செய்ய வேண்டும். கே.கரிசல்குளம் சுகாதார வளாகம் சேதமடைந்து உள்ளது.
- பழனி, தனியார் ஊழியர்.
அனைத்து பகுதிகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. பல லட்சங்கள் செலவு செய்து சீரமைக்கப்பட்ட வீதிகள் தற்போது படு மோசமாக இருக்கிறது. ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை.
- பாஸ்கரன், விவசாயி.