ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கிரீன்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.
ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். புதிய தலைவராக பாலமுருகன், செயலாளராக கருப்பசாமி பொறுப்பேற்றனர். ரோட்டரி நிர்வாகிகள் பீமா ஆனந்த், வேலாயுதம் வாழ்த்துரையாற்றினர். மாணவர்கள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர்கள் ராஜசேகர், செல்வகுமார், ஆனந்த் குமார், சிவகுமார், பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.