
வீட்டிற்குள் வரும் கழிவுநீர்
இசக்கிமுத்து, குடும்பத் தலைவர்: வெம்பக்கோட்டை ரோடு வடக்கு குறுக்குத்தெரு, நம்மாழ்வார் காம்பவுண்ட்டில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
குடிநீரில் கழிவுநீர்
சீனா, குடும்பத் தலைவி: 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இந்த குடிநீரும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. பல முறை நகராட்சியில் புகார் செய்தும் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாக்கடையில் குப்பை
சர்மிளா, குடும்பத் தலைவி: வாறுகாலை சுத்தம் செய்ய வரும் ஆட்கள் குப்பை அகற்றிவிட்டு ரோடு ஓரத்தில் வைக்கின்றனர். இது மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து சாக்கடை முழுவதும் குப்பை மிதக்கிறது. கழிவு நீர் செல்லவில்லை.
ரோடு வ சதி தேவை
சுப்பையா, குடும்பத் தலைவர்: ரோடு முழுவதும் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை யும், மழை நீரும் தெருவில் முழங்கால் அளவுக்கு தேங்குவதுடன் பாத்ரூம் வழியாக வீட்டிற்குள் வந்து விடுகிறது.