விருதுநகர்: விருதுநகர்பிரம்மாகுமாரிகள் கிளையில் மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயற்சி முகாம் நடந்தது. இதில் கிளை சகோதரிகள் செல்வி, சிவகாசி சுதா, ராஜபாளையம் சாவித்திரி, ஸ்ரீவில்லிபுத்துார் மகேஸ்வரி, அருப்புக்கோட்டை சகோதரர் கணேஷ், சகோதரி யோகஸ்ரீ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
இவர்கள் மாணவர்களுக்கான ஆளுமை வகுப்புகளும், நினைவாற்றல், கவனிக்கும் திறனுக்கான பயிற்சிகளும் பண்புகள் சார்ந்த விளையாட்டுகளும் நடத்தினர். பிரம்மா குமாரி தீபா பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தார்.