சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்.
44. இவருக்கும் இவரது மனைவியும் கருத்து வேறுபாட்டினால் தனியாக வசித்து வருகின்றனர். மாரியப்பன் தனது மனைவியிடம் அலைபேசியில் பேசி வீட்டிற்கு வரும்படி அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாரியப்பன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.----