/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த திணறல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த திணறல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த திணறல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த திணறல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த திணறல்
ADDED : ஜூலை 07, 2024 11:46 PM
அருப்புக்கோட்டை: அரசு துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், 2ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளியில் இந்தாண்டு துவங்க உள்ளனர். இதற்கான பணிகளை துவங்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் திண்டாடி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 2023 ஆகஸ்டில் துவங்கப்பட்டது. இதன் 2ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஜூலை 15ல் துவங்க உள்ள நிலையில், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதற்கான பணிகளை செய்ய தலைமை ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் சார்பாக சமையலறை, பிளக்ஸ் போர்டு வைத்தல், கட்டடத்திற்கு வர்ணம் பூசுதல், தட்டு, டம்ளர்கள் வாங்குதல், மின் விளக்கு அமைத்தல், குடிநீர் வசதி உட்பட வசதிகளை நிர்வாகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் மட்டும் இந்த வசதிகளை அரசு ஏற்று செய்துள்ளது.
தற்போது பள்ளி நிர்வாக மானிய நிதி எதுவும் அரசு மூலம் வழங்கப்படுவது இல்லை. இதனால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் இந்த வசதிகளை செய்ய வேண்டியுள்ளது என புலம்புகின்றனர். மேலும் உடனடியாக இந்த பணிகளை செய்து புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களை பாடாய்ப் படுத்துகிறது.