/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்
ADDED : ஜூலை 07, 2024 01:42 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனிசுவாதி உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 10:15 மணிக்கு கொடி பட்டம் மாட வீதிகள் சுற்றி பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடி ஏற்றினார். பின்னர் வடபத்ர சயனர் சன்னதியில் பெரியாழ்வார் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வீதி உலா நடந்தது.
விழாவில் செயல் அலுவலர் லட்சுமணன், கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 14 காலை 8:00 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.