/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வன்னியம்பட்டி--சத்திரப்பட்டி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள் வன்னியம்பட்டி--சத்திரப்பட்டி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள்
வன்னியம்பட்டி--சத்திரப்பட்டி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள்
வன்னியம்பட்டி--சத்திரப்பட்டி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள்
வன்னியம்பட்டி--சத்திரப்பட்டி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள்
ADDED : ஜூன் 18, 2024 06:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா வன்னியம்பட்டி விலக்கில் இருந்து சத்திரப்பட்டி வரையுள்ள ரோட்டில் அதிகளவில் உள்ள வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை முழுமையாக அகற்றவேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
வன்னியம்பட்டி விலக்கில் இருந்து படிக்காசு வைத்தான் பட்டி, கொத்தங்குளம், மொட்டமலை வழியாக சத்திரப்பட்டிக்கு செல்லும் ரோடு, ராஜபாளையம் நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்லும் ரோடு உள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்களும், சத்திரப்பட்டியில் உள்ள பேண்டேஜ் கம்பெனிகள் வேன்களும், நூற்பாலை கனரக வாகனங்களும் அதிகளவில் பயணித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் பல இடங்களில் உயரமாகவும் வேகத்தடைகள் உள்ளதால் டூவீலர்களில் பயணிப்பவர்கள் நிலைதடுமாறி விபத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மொட்டமலை கண்மாய் கரையிலும், ரோடு இறக்கத்திலும் பலர் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் ரோடு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, எதிரும் புதிருமாக வரும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளையும், தேவையற்ற வேகத்தடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.