ADDED : ஜூன் 29, 2024 04:46 AM

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக ஆட்டோமேட்டிக், ஏரோஸ்பேஸ் பயன்படுத்துவதற்கான உற்பத்தி குறித்த 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.
நிறுவனர் முகமதுஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியாபாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
சி.எஸ்.ஐ.ஆர்., முதன்மை விஞ்ஞானி சங்கரன், பெங்களூரு டி.ஆர்.டி.ஓ., இணை இயக்குனர் விஞ்ஞானி ராம் பிரபு, திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., ரங்கசாமி பொறியியல் கல்லூரி பேராசிரியர் சரவணகுமார் கருத்தரங்கில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியவைகள் பற்றியும் பேசினர்.
துறைத் தலைவர் அருண் பாலசுப்பிரமணியம், வேளாண் பொறியியல் துறைத் தலைவர் முத்துச்சோலை ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.