ADDED : ஜூன் 27, 2024 11:55 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோஇன்ஜினியரிங் கல்லுாரிக்கு தலைசிறந்த 25 பொறியியல் கல்லுாரிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
அகடமிக் இன்சைட்ஸ் அமைப்பால் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சதவிகிதம், ஆளுமை மேம்பாடு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள், ஆங்கிலபுலமை உள்ளிட்ட அளவீடுகளை கொண்டு ஏராளமான செய்தது. நாடு முழுவதுமிருந்து பல்வேறு கல்லுாரிகள் பங்கேற்றன. இதில் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி 25 சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது.
கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர்ராஜ கருணாகரன் உள்ளிட்டோர் ஐ.எஸ்.டி.இ தலைவர் பிரதாப் சிங் ககோசோ, கே.ஐ.ஐ.டி நிறுவனர் அச்சுதா சமந்தா ஆகியோரிடம் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றதற்காக ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா முதல்வர், ஆசிரியர், மாணவர்களை பாராட்டினார்.