ADDED : ஜூன் 23, 2024 03:14 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் பனை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
என்.என்.சி., மாணவர் படை சார்பாக நடந்த விழாவிற்கு நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் பனை மரத்தின் முக்கியத்துவம், பற்றி விளக்கினார். கல்லூரி செயலர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். கல்லூரி வளாகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நடப்பட்டது. ஏற்பாடுகளை என்.சி.சி., அணி தலைவர் பாக்கியராஜி செய்தார்.- - -