குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம்
குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம்
குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம்
ADDED : ஜூலை 13, 2024 07:10 AM

சிவகாசி, : சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம் அடைந்து இருப்பதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் குழாய் பதிக்கப்பட்டு அப்பகுதி மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இதே ரோட்டில் உள்ள பள்ளி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதனால் ரோடு சேதம் அடைந்தது. தொடர்ந்து சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டது. ஆனால் ரோடு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
தற்போது ரோடு மிகப்பெரிய பள்ளமாக மாறிவிட்டது. நகருக்குள் செல்வதற்கு டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் வழியாகத்தான் செல்கின்றனர். மேலும் இதனை கடந்துதான் 5000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். இயல்பாகவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த வழியில் ரோடு சேதத்தால் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நேற்று காலை 6:00 மணி அளவில் சேதமடைந்த ரோட்டில் சிமெண்ட் கல் ஏற்றி வந்த லாரி பதிந்து விட்டது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்த நிலையில் பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன்பாகவே லாரி எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. எனவே இங்கு உடனடியாக சேதம் அடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.