/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு சேதம்; துார்வாராத ஓடை, வாறுகால் ரோடு சேதம்; துார்வாராத ஓடை, வாறுகால்
ரோடு சேதம்; துார்வாராத ஓடை, வாறுகால்
ரோடு சேதம்; துார்வாராத ஓடை, வாறுகால்
ரோடு சேதம்; துார்வாராத ஓடை, வாறுகால்

புற்களை அகற்றவும்
டேனியல், சமூக ஆர்வலர்: சிவகாசி விளாம்பட்டி ரோடு மாலையம்மன் கோயில் அருகே காலங்கரை உள்ளது. ஆரம்ப காலங்களில் இப்பகுதியில் விவசாயம் நடைபெறும் போது காலாங்கரையின் வழியாக வந்த தண்ணீரை பயன்படுத்தினர். நாளடைவில் விவசாய நிலங்கள் வீட்டுமனையாக மாறிய பின்னர் காலாங்கரை கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் தற்சமயம் காலாங்கரை முழுவதுமே கோரைப் புற்கள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் வர வழி இல்லை. எனவே கோரைப் புற்களை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் சிரமம்
பாண்டியன், இளநீர் வியாபாரி: விளாம்பட்டி செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக செல்கின்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர இவ்வழியே செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்துள்ள இடங்களில் ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.