/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கல் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் திருத்தங்கல் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தங்கல் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தங்கல் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தங்கல் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஜூன் 25, 2024 12:09 AM

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ரத வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம் இன்று (ஜூன் 25) நடக்கிறது. இந்நிலையில் திருத்தங்கல் நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர மாநகராட்சி ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நான்கு ரத வீதிகளில் கடைகள் முன் இருந்த செட், கட்டுமானம், தள்ளுவண்டி என 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். திருவிழாவிற்காக மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
விருதுநகர் பிரதான ரோட்டில் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.