ADDED : ஜூலை 19, 2024 06:26 AM
விருதுநகர்: தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள், கிரஷர் உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் சாமி கூறியதாவது:
மாவட்டத்தில் முறையான குவாரிகளுக்கு விருதுநகர் கனிமவளத்துறையின் ஓய்வு பெற்ற துணை இயக்குனர் தங்க முனியசாமி பதவிக்காலத்தில் அனுப்புகை சீட்டு வழங்க மறுத்ததால் குவாரி பணிகள் நடக்காமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதை ஆட்சேபித்து எங்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் அனுப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டது.
இதனடிப்படையில் மே மாதத்தில் இருந்து தங்கமுனியசாமியால் குவாரிகளுக்கு அனுப்புகை சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கியது. இந்நிலையில் அவர் ஓய்வு பெற்ற பின் அவர் சீல் வைத்த குவாரிகள் பல மீண்டும் இயங்குவதாகவும், விதிமீறல்கள் நடப்பதாகவும் வெளியான தகவல் தவறானது என்றார்.