ADDED : ஜூலை 20, 2024 12:18 AM
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.