/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உறவு பெண்ணின் கணவரை கொன்ற போலீஸ்காரர் கைது உறவு பெண்ணின் கணவரை கொன்ற போலீஸ்காரர் கைது
உறவு பெண்ணின் கணவரை கொன்ற போலீஸ்காரர் கைது
உறவு பெண்ணின் கணவரை கொன்ற போலீஸ்காரர் கைது
உறவு பெண்ணின் கணவரை கொன்ற போலீஸ்காரர் கைது
ADDED : மார் 14, 2025 01:38 AM

அருப்புக்கோட்டை,:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்தவர் துரைமுருகன், 40; அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அமரர் ஊர்தி டிரைவர். இவரது மனைவி ராமலட்சுமி. துரைமுருகன் மதுவுக்கு அடிமையானதால், தம்பதிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மார்ச் 5ல் துரைமுருகன் வீட்டில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
விசாரணையில், விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமியின் துாரத்து உறவினரும், சத்தீஸ்கர் மாநிலம், கோப்ராவில் பணிபுரியும் சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் ஜெயகணேசனை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கணவர் நிலை குறித்து ராமலட்சுமி ஜெய்கணேசனிடம் புலம்பியுள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துரைமுருகன் மனைவியை கண்டித்ததோடு, ஜெயகணேசனை திட்டியுள்ளார். ஜெயகணேசன் மார்ச் 4ம் தேதி இரவு துரைமுருகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்' என்றனர்.