/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் போலீசுக்கு சிறை குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் போலீசுக்கு சிறை
குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் போலீசுக்கு சிறை
குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் போலீசுக்கு சிறை
குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் போலீசுக்கு சிறை
ADDED : ஜூன் 16, 2024 01:58 AM
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்த ஞானமணியை 52, குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கிய பெண் போலீஸ் தீபாமணிக்கு 38, ஓராண்டு சிறை, அவரது தாய் மாரியம்மாளுக்கு 58,ரூ. 1000 அபராதம் விதித்து விருதுநகர் ஜே.எம்-2 நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சூலக்கரையைச் சேர்ந்தவர் ம.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன். மனைவி ஞானமணி. இவரின் வீட்டு அருகே வசித்தவர் மாரியம்மாள். மகள் தீபாமணி சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார்.
இரு குடும்பத்தினருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாக்கு வாதம் முற்றியது. தீபாமணி மட்டையால் தாக்கியதில் ஞானமணி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சூலக்கரை போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் தீபாமணிக்கு ஒராண்டு சிறை, தாய் மாரியம்மாளுக்கு ரூ. 1000 அபராதம் விதித்து விருதுநகர் ஜே.எம் - 2 நீதிபதி பி. கலை நிலா உத்தரவிட்டார்.