Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

சிறுவன் மர்மச்சாவு

சாத்துார்: சாத்துார் புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் செல்வக்குமார், 18. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆக., 4ல் மதியம் 3:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார் .நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்தார். தீயனைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

சாத்துார்: சாத்துார் ஆர்.சி.வடக்குத்தெருவை சேர்ந்தவர் இன்னாசியார், 70. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலை கிழக்கு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துர்ர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளியில் திருட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங் குளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பள்ளியின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்து 900,பரிசு பொருட்கள், எடை பார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர்.அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us