Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூலை 07, 2024 11:46 PM


Google News
செயின் பறிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி மேல அழகியநல்லுாரை சேர்ந்தவர் வைதேகி 48. நேற்று முன் தினம் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

சிவகாசி: அனுப்பன்குளம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் 75. மாத்திரை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற இவர் சுந்தரராஜபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது பேராபட்டியை சேர்ந்த பாலகணேஷ் 20, ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் பால்ராஜ் இறந்தார். பாலகணேஷ் காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கோட்டையூரை சேர்ந்த சுப்பிரமணி 52, என்பவர் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துள்ளார். அவரை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us