ADDED : ஜூன் 27, 2024 11:54 PM
சாத்துார் : சாத்துார் அம்மாபட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை மகன் சிவா, 22. அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சிறுமி கர்ப்பம் ஆனார். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
தகவல் அறிந்த சமூக நலம் விரிவாக்க அலுவலர் பூங்கொடி, 56. சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் மாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் செய்தார்.மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.