ADDED : ஜூன் 15, 2024 07:06 AM
நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்
சிவகாசி: சுக்கிரவார்பட்டி கலுங்கு ஓடை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திருத்தங்கலிலுள்ள கல்லுாரி யில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி 20. இவர் வீட்டிலிருந்து கடைக்கு போவதாக கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.------
தம்பதிக்கு கொலை மிரட்டல்
சிவகாசி: செங்கமல நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரி 38. இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் தந்தையிடம் ரூ. 15 ஆயிரத்து 500 க்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கினார். தனது தந்தையிடம் ஏமாற்றி ஆட்டுக்குட்டியை வாங்கியதாக முனியராஜ், கார்த்தீஸ்வரியின் வீட்டிற்கு வந்து அவரை தகாத வார்த்தை பேசி கையில் கத்தியால் வெட்டினார். தடுக்க வந்த கார்த்தீஸ்வரியின் கணவர் முனியாண்டியையும் தகாத வார்த்தை பேசி அடித்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். முனியராஜை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
-----கஞ்சா: வாலிபர் கைது
சிவகாசி: பள்ளபட்டி ரோடு தேவராஜ் காலனி சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 21. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.--
பெண் மாயம்
சாத்துார்: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் மாரிச் செல்வம் ,இவர் மனைவி மாலினி, 23. மே 27 ல் சாத்துார் எஸ். ஆர் .நாயுடு நகரில் உள்ள தந்தை முனியாண்டி வீட்டிற்கு வந்து மாலினி தங்கினார். மறுநாள் காலையில் மாயமானார்.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய் குறுக்கே பாய்ந்ததில்
டூவீலர் விபத்து: வாலிபர் பலி
சாத்துார்: சாத்துார் காமாட்சி யார் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் செந்துார்பாண்டியன், 25. மே 19 சாத்துார் மெயின் ரோட்டில் அமீர் பாளையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தபோது குறுக்கே நாய் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.நேற்று முன்தினம் மதியம்1:00 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.