Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூன் 13, 2024 05:14 AM


Google News
விபத்து வாலிபர் பலி

சிவகாசி: நதிக்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 24. இவர் தனது நண்பரின் டூவீலரில் மற்றொரு நண்பர் அஜித்குமாரை 26, ஏற்றிக்கொண்டு அச்சம் தவிழ்த்தான் நதிக்குடி ரோட்டில் சென்ற போது வளைவில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்துப்பாண்டி இறந்தார். அஜித் குமார் காயமடைந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

-----மாணவி தற்கொலை

சிவகாசி: சித்துராஜபுரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் நடராஜ் மகள் அபிதா 18. பிளஸ் டூ முடித்த இவர் தற்காலிகமாக சிவகாசியில் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். ரிசல்ட் வந்த நிலையில் தனது தாயாரிடம் கேட்டரிங் படிக்கப் போவதாக கூறினார். அதற்கு நிறைய செலவு ஆகும் எனவே அரசு கல்லுாரியில் தான் படிக்க வேண்டும் என அவரது தாயார் கூறினார். இதனால் மனமுடைந்த அபிதா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

சாத்துார்: சாத்துார் எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் தனியார் பள்ளி அருகே பாண்டியராஜன், 26. விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சுழி: திருச்சுழி அருகே பள்ளி மடம் கருப்பசாமி கோவில் அருகே எஸ்.ஐ., வீர சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி,26, கனகராஜ்,21, ஆகியோரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

------இளம் பெண் மாயம்

சிவகாசி: விஸ்வநத்தம் நடு ஊரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் நர்மதை 19. சிவகாசியில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த இவர் ஒரு நபரிடம் பழகி வந்ததால் அவரை பெற்றோர் கல்லுாரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நர்மதை மீண்டும் திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் மோதி முதியவர் பலி

--ராஜபாளையம்: மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று மதியம் 1:45 மணிக்கு ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. கிளம்பிய சிறிது நேரத்தில் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதி சென்றபோது தண்டவாளத்தில் ஒருவர் மது அருந்திய நிலையில் இருந்ததை கண்டு லோகோ பைலட் ரயிலை நிறுத்த முயன்றார்.

அதற்குள் ரயில் மோதி துாக்கி வீசப்பட்ட நிலையில் முதியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை

நரிக்குடி: நரிக்குடி சாலைஇலுப்பைகுளம் கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நரிக்குடி போலீசார் விசாரணை செய்ததில், நரிக்குடி கட்டணூரை சேர்ந்த ரகுபதி 36. மானாமதுரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராமநாதபுரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் மேலாளராக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் கட்டணூரில் வசிக்கும் தாய், தந்தையை பார்க்க வந்தவர், குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us