/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணி நேரம் உயர்த்தியதைரத்து செய்ய மனு பணி நேரம் உயர்த்தியதைரத்து செய்ய மனு
பணி நேரம் உயர்த்தியதைரத்து செய்ய மனு
பணி நேரம் உயர்த்தியதைரத்து செய்ய மனு
பணி நேரம் உயர்த்தியதைரத்து செய்ய மனு
ADDED : ஜூன் 20, 2024 04:07 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நுண்கதிர் ஊழியர்களின் பணி நேரத்தை 5 1/2 ல் இருந்து 8:00 மணி நேரமாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா தலைமையில் மருத்துவத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதில் சமூக நலத்துறை ஊழியர் சங்க மாநிலப் பொருப்பாளர் முருகானந்தம், மருந்தாளுனர் சங்க மாநில பொறுப்பாளர் குமார், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் போத்திராஜ், தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டத் தலைவர் இன்பம், செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.