/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்கம்பம் முறிந்து 20 நாளாகியும் சரி செய்யாததால் மக்கள் பாதிப்பு மின்கம்பம் முறிந்து 20 நாளாகியும் சரி செய்யாததால் மக்கள் பாதிப்பு
மின்கம்பம் முறிந்து 20 நாளாகியும் சரி செய்யாததால் மக்கள் பாதிப்பு
மின்கம்பம் முறிந்து 20 நாளாகியும் சரி செய்யாததால் மக்கள் பாதிப்பு
மின்கம்பம் முறிந்து 20 நாளாகியும் சரி செய்யாததால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:00 AM

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி மயான பாதையில் மின்கம்பங்கள் உடைந்து 20 நாட்கள் கடந்துள்ளதால் இறப்பு விசேஷங்களுக்கு போதிய வசதியின்றி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாயில் பொது மயானம் அமைந்துள்ளது. வள்ளலார் மன்றம் சார்பில் மெயின் ரோட்டில் இருந்து மயானத்திற்கு பேவர் பிளாக் பாதை, இரண்டு பக்கம் மரங்கள், மின் இணைப்பு, தண்ணீர் தொட்டி, மின்விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 4-ல் வீசிய பலத்த காற்றில் உயரமான மரம் அப்பகுதிக்கு சப்ளை ஆகி வரும் மின் கம்பத்தில் சரிந்து விழுந்ததால் மூன்று மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இது குறித்து அப்பகுதியினர் தொடர் கோரிக்கைக்குப்பின் மின்வாரியம் சார்பில் புதிய மின்கம்பங்களை மட்டும் மெயின் ரோட்டோரம் இறக்கி சென்றுள்ளனர். ஜூன் 19 சத்திரப்பட்டியில் மின் பராமரிப்பு மின் வெட்டு நாளில் பணிகளை எதிர்பார்த்தனர்.
மின் சப்ளை வழங்காததால் இறப்பு விசேஷங்களுக்கு வருபவர்கள் தினமும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பால்கனி: மாதம் 25 லிருந்து 30 இறப்புகள் நிகழ்ந்து எரியூட்டல் நடைபெறுகிறது. மின்கம்பம் உடைந்து சப்ளை இல்லாததால் நிகழ்ச்சிக்கு வருவோர் இரவு நேரங்களில் வெளிச்சமின்றியும் தண்ணீர் எடுத்து விட முடியாமல் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. கண்மாய் பகுதி என்பதால் இரவில் தடுமாறிச் செல்வதுடன், குடிமகன்கள் திறந்த வெளி பாராக மாற்றி வைத்துள்ளனர். விரைந்து தீர்வு காண வேண்டும்.