/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிருஷ்ணன்கோவிலில் மழை நேரத்தில் தவிக்கும் பயணிகள் கிருஷ்ணன்கோவிலில் மழை நேரத்தில் தவிக்கும் பயணிகள்
கிருஷ்ணன்கோவிலில் மழை நேரத்தில் தவிக்கும் பயணிகள்
கிருஷ்ணன்கோவிலில் மழை நேரத்தில் தவிக்கும் பயணிகள்
கிருஷ்ணன்கோவிலில் மழை நேரத்தில் தவிக்கும் பயணிகள்
ADDED : ஜூன் 03, 2024 02:37 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் நாளுக்கு நாள் போக்குவரத்தும் அதிகரித்து வரும் சூழலில் மழை நேரத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.
மதுரை- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலை சுற்றி குன்னுார், வலையபட்டி, விழுப்பனுார், பாட்டக்குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை உள்ளதால் அதிகளவில் வெளியூர் பயணிகள் கிருஷ்ணன் கோவிலுக்கு வருகின்றனர்.
மேலும் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், சுந்தரபாண்டியம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மதுரை, தேனி, விருதுநகர் செல்ல கிஷ்ணன்கோவிலுக்கு வருகின்றனர்.
இதனால் கிருஷ்ணன் கோவிலில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டு வருகிறது. அதிலும் காலை, மாலை வேலை நேரங்களில் ரோட்டோரங்களில் நின்று தான் மக்கள் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதில் மழை நேரங்களில் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.
எனவே, கிருஷ்ணன்கோவிலில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை முழு அளவில் அகற்றி, சேத்துாரில் உள்ளது போல் பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.