ADDED : ஜூன் 02, 2024 03:19 AM

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் லுார்து அன்னை
விருதுநகர் பாண்டியன் நகர் பாதிரியார் லாரன்ஸ், உதவிபாதிரியார் இமானுவேல் சதீஷ் தலைமை வகித்து முதல்நாள் திருவிழாவை நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு துவக்கினர். அதன் பின் திருப்பலி, மறையுரை நடந்தது. சிறப்பு அலங்காதரதில் லுார்து அன்னை காட்சியளித்தார். தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, அபிஷேகம், ஆராதனை நடந்தது.
திருவிழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாண்டியனர் நகர் பாதிரியார் லாரன்ஸ், உதவிபாதிரியார் மரிய ஜான் பிரான்ங்லின் தலைமையில் மாலை 7:00 மணிக்கு திருப்பலி, மறையுரை நடந்தது. லுார்து அன்னை தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாண்டியன் நகர் பாதிரியார் லாரன்ஸ் தலைமையில் மக்கள் செய்தனர்.