/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையில் அமைச்சரின் பெயரை கூறும் ஆக்கிரமிப்பாளர்கள் அருப்புக்கோட்டையில் அமைச்சரின் பெயரை கூறும் ஆக்கிரமிப்பாளர்கள்
அருப்புக்கோட்டையில் அமைச்சரின் பெயரை கூறும் ஆக்கிரமிப்பாளர்கள்
அருப்புக்கோட்டையில் அமைச்சரின் பெயரை கூறும் ஆக்கிரமிப்பாளர்கள்
அருப்புக்கோட்டையில் அமைச்சரின் பெயரை கூறும் ஆக்கிரமிப்பாளர்கள்
ADDED : ஜூன் 23, 2024 03:23 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் நாங்கள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் என கூறுவதால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயங்கி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு, விருதுநகர் ரோடு உட்பட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. நகரில் ரோடும் குறுகலான அமைப்பில் உள்ளது. ரோடு வரை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் முழு சுதந்திரத்துடன் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அதிகாரிகள் கடைக்காரர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினால் நான் அமைச்சரின் ஆதரவாளர்கள் எனக்கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால் அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
வள்ளிக்கன்னு, ஆர்.டி.ஓ.,: தேர்தல்கள், ஜமாபந்தி உட்பட பணிகள் தொடர்ச்சியாக வந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது ஜூலை முதல் வாரத்தில் ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படும்.