ADDED : ஜூன் 18, 2024 06:04 AM
சாத்துார் : சாத்துார் மேலப்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை பிரேமலதா தலைமை வகித்தார். உரை அறக்கட்டளை தலைவர் ராஜா இம்மானுவேல் பாண்டியன் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். 10, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.