/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அல்லல் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அல்லல்
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அல்லல்
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அல்லல்
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அல்லல்
ADDED : ஜூன் 06, 2024 05:49 AM

விருதுநகர் : விருதுநகர் மீசலுார் - தாதம்பட்டிக்கு இடைப்பட்ட ஊராட்சிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே குல்லுார்சந்தை செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளது.
தற்போது பருவநிலை மாற்றத்தால் கோடை நேரங்களில் மாலை நேரத்தில் அதிக மழை பெய்தது. தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையாலும் மாலை நேர மழை ஆங்காங்கே பல இடங்களில் பெய்து வருகிறது.
இதனால் பல பகுதிகளில் நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் ரயில்வே சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் அனைத்து ஊரகப்பகுதிகளில் இந்த சிக்கல் உள்ளது. குறிப்பாக விருதுநகர் மீசலுார் - தாதம்பட்டி சுரங்கப்பாதை, கலெக்டர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குல்லுார்சந்தை செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தீர்வே இல்லாத இந்த சிக்கலால் அப்பகுதி மக்கள் தினம் தினம் அல்லல்படுகின்றனர்.
மேலும் மீசலுார் - தாதம்பட்டி சுரங்கப்பாதையை பயன்படுத்தி பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். இது போன்று ஜூன் 10 வரை மழைநீர் தேங்கி இருந்தால் மாணவர் சிரமப்படுவர். கூரைக்குண்டில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனே வர வேண்டி உள்ளது. ரயில்வே நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு மழைநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும்.