/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயல்படாத சிக்னல், ரோட்டில் நிற்கும் வாகனங்கள் செயல்படாத சிக்னல், ரோட்டில் நிற்கும் வாகனங்கள்
செயல்படாத சிக்னல், ரோட்டில் நிற்கும் வாகனங்கள்
செயல்படாத சிக்னல், ரோட்டில் நிற்கும் வாகனங்கள்
செயல்படாத சிக்னல், ரோட்டில் நிற்கும் வாகனங்கள்
ADDED : ஜூன் 04, 2024 05:48 AM

சிவகாசி : செயல்படாத டிராபிக் சிக்னல்கள், ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் என காரனேசன், திருத்தங்கல் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
காரனேசனில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது. காரனேசன் நான்கு விலக்கு ரோட்டில் டிராபிக் சிக்னல்கள் அமைத்தும் இன்று வரை செயல்படவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சிறுகுளம் கண்மாய் கரை அருகே செல்லும் ரோட்டில் நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டும் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கதையாகவே உள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தின் கழிவுநீர் ரோட்டில் ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய் முழுவதும் கழிவு நீர் கலக்கப்பட்டும், ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்தும் பயன்பாடு இன்றி உள்ளது.
முத்துராமலிங்கம்: காரனேசன் நான்கு விலக்கு ரோட்டில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுனால் வரையிலும் செயல்படவில்லை. எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும் இங்கு சிக்னல்கள் செயல்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனீஸ் பாண்டி, வழக்கறிஞர்: சிறுகுளம் கண்மாய் கரை, திருத்தங்கல் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. சிறுகுளம் கண்மாயை முழுமையாக துார்வார வேண்டும்.