/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆங்கில ஆசிரியர் இல்லை; குடிநீரில் நெளியும் புழுக்கள் : கலெக்டரிடம் மாணவர்கள் புகார் ஆங்கில ஆசிரியர் இல்லை; குடிநீரில் நெளியும் புழுக்கள் : கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
ஆங்கில ஆசிரியர் இல்லை; குடிநீரில் நெளியும் புழுக்கள் : கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
ஆங்கில ஆசிரியர் இல்லை; குடிநீரில் நெளியும் புழுக்கள் : கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
ஆங்கில ஆசிரியர் இல்லை; குடிநீரில் நெளியும் புழுக்கள் : கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
ADDED : ஜூலை 03, 2024 05:31 AM
விருதுநகர் : சிவகாசி நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் இல்லை என்றும், குடிநீரில் புழுக்கள் நெளிவதாகவும் மாணவர்கள் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார் அளித்தனர்.
அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பள்ளியில் 2 ஆண்டுகள் ஆகியும் ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. கழிப்பறையில் கதவு இல்லை. சரிவர சுத்தம் செய்யாததால் வகுப்பறை வரை துார்நாற்றம் வீசுகிறது.
எங்களால் வகுப்பறையின் உள்ளே அமர முடியவில்லை. போதிய குடிநீர் வசதி இல்லை. குடிநீர் தொட்டி அசுத்தமாக உள்ளது.
புழுக்கள் நெளிகின்றன. இதனால் வயிற்று உபாதை ஏற்படுகிறது. மாணவர்களுக்கு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லை.
எனவே இப்பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என கேட்டனர்.
கலெக்டர் ஜெயசீலன், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5)க்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.