/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையத்தில் தொடங்கியது புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி ராஜபாளையத்தில் தொடங்கியது புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ராஜபாளையத்தில் தொடங்கியது புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ராஜபாளையத்தில் தொடங்கியது புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ராஜபாளையத்தில் தொடங்கியது புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பணி வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூலை 07, 2024 01:43 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நீண்ட கோரிக்கைக்கு பின் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு செப்பனிடும் பணி தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
ராஜபாளையம் காந்தி கலை மன்றம் - புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்டு இரண்டு முறை தார் ரோடு அமைத்தனர். இருப்பினும் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை பாதாள சாக்கடை மேன் ஹோல்கள் ஒட்டி ரோடு பெயர்ந்தும், சாலையை விட அதிக உயரமாகவும் அமைந்திருந்ததால் ரோட்டின் ஒரு பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
குறுகிய இந்த ரோட்டில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகளாக மாறி அடிக்கடி விபத்து ஏற்படுத்தியும் வந்ததால் தினமும் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வந்தனர்.
பல்வேறு தரப்பினரும் கோரிக்கை அடுத்து மாநில நெடுஞ்சாலை சார்பில் பள்ளங்களை சரி செய்யும் விதமாக தார் சாலை பணிகள் தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.