/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருமணமான 10வது நாளில் புதுப்பெண் மாயம் திருமணமான 10வது நாளில் புதுப்பெண் மாயம்
திருமணமான 10வது நாளில் புதுப்பெண் மாயம்
திருமணமான 10வது நாளில் புதுப்பெண் மாயம்
திருமணமான 10வது நாளில் புதுப்பெண் மாயம்
ADDED : ஜூலை 05, 2024 04:18 AM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் திருமணமாகி 10 நாளில் புதுப்பெண் மாயமானது குறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்திரப்பட்டி அருகே தென்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கிலிக்காளை 27, இவருக்கும் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த மாரீஸ்வரிக்கும் 21, ஜூன் 21ல் திருமணம் நடந்து தென்கரையில் கணவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
ஜூலை 1ல் வெளியே சென்ற மாரீஸ்வரி வீடு திரும்பவில்லை. அதே பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்ற சுரேஷ் என்பவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.