/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாசி படர்ந்துள்ள ஊருணிகள்; பருவமழைக்கு முன் துார்வார எதிர்பார்ப்பு பாசி படர்ந்துள்ள ஊருணிகள்; பருவமழைக்கு முன் துார்வார எதிர்பார்ப்பு
பாசி படர்ந்துள்ள ஊருணிகள்; பருவமழைக்கு முன் துார்வார எதிர்பார்ப்பு
பாசி படர்ந்துள்ள ஊருணிகள்; பருவமழைக்கு முன் துார்வார எதிர்பார்ப்பு
பாசி படர்ந்துள்ள ஊருணிகள்; பருவமழைக்கு முன் துார்வார எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 11:43 PM

சிவகாசி: சிவகாசியில் ஊராட்சி பகுதிகளில் பாசி, கோரைப்புற்களால் ஆக்கிரமித்துள்ள ஊருணிகளை மழைக்காலத்திற்கு முன்பு துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்காகவும் புழக்கத்திற்காகவும் பல்வேறு கிராமங்களில் ஊருணிகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் ஊருணியில் தண்ணீர் வந்து அப்பகுதியினரின் குடிநீர் ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும்.
இதனால் அவ்வப்போது ஊருணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரித்து வந்தது. ஆனால் தற்போது பெரும்பான்மையான ஊருணிகளில் ஆகாயத்தாமரைகள், முட்புதர்கள், கோரை புற்களோடு, பாசியும் படர்ந்து வீணாக காட்சி அளிக்கிறது. இது தவிர பல ஊருணிகள் குப்பைக் கிடங்காகவும் மாறிவிட்டது.
இதனால் ஊருணியால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேட்டிற்கும் வழி வகுக்கிறது. சிவகாசி பகுதியில் நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊருணி, எரிச்சநத்தம் ஊருணி, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊருணி, பேர் நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஊருணி, திருத்தங்கல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு ஊருணிகள் பாசி படர்ந்து காணப்படுகிறது.
அனுப்பன்குளம் பஸ் ஸ்டாப் அருகே ஊருணியில் குப்பை கொட்டப்பட்டு தொற்று நோய் பரப்பு இடமாக மாறிவிட்டது. இதனால் ஊருணி தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. எனவே அடுத்த மழைக்காலம் துவங்குவதற்குள் ஊருணிகளை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.