/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிரிவல பாதையில் மருத்துவ கழிவுகள் * அதிர்ச்சியில் பக்தர்கள் கிரிவல பாதையில் மருத்துவ கழிவுகள் * அதிர்ச்சியில் பக்தர்கள்
கிரிவல பாதையில் மருத்துவ கழிவுகள் * அதிர்ச்சியில் பக்தர்கள்
கிரிவல பாதையில் மருத்துவ கழிவுகள் * அதிர்ச்சியில் பக்தர்கள்
கிரிவல பாதையில் மருத்துவ கழிவுகள் * அதிர்ச்சியில் பக்தர்கள்
ADDED : மார் 14, 2025 06:23 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலில் உள்ள கிரிவல பாதை கிழக்கு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி உள்ளதால் சுகாதார கேடாகவும் உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி 17 வார்டில் மலையரசன் கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி கிரிவல பாதை உள்ளது. பாதையின் இரு ஓரங்களில் மரங்கள் வளர்த்துள்ளனர்.
இதனால், அதிகாலை,மாலையில் மக்கள் நடை பயிற்சியும் செய்வர். கிரிவல பாதையின் கிழக்கு பகுதியில் யாரோ மருத்துவ கழிவுகளை கொட்டியுள்ளனர். மருந்து பாட்டில்கள், ஊசிகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கழிவு துணிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் மூடை மூடையாக கிடக்கிறது. அருகில் கண்மாய்க்கு செல்லும் மழைநீர் ஓடை இருப்பதால், இதில் கழிவுகள் வீசப்பட்டு கண்மாயில் கலக்கிறது.
இதனால் கிரிவல பாதையில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு சுகாதார கேடாக உள்ளது. நாற்றம் எடுப்பதால் படிக்க வரும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஏற்கனவே, சொக்கலிங்கபுரம் கான்வென்ட் பள்ளி, காந்திநகர் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியிலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. நகரில் மருத்துவ கழிவுகளை ரோடு ஓரங்களில் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
நகராட்சி சுகாதார பிரிவினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து மருத்துவ கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல், பாதுகாப்புடன் கழிவுகளை அதற்குரிய வாகனங்களில் கொட்ட தனியார் மருத்துவ மனைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
----
படம் உள்ளது.