/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குறைந்த மின் அழுத்தம்; மேடும், பள்ளமுமாக தெருக்கள் குறைந்த மின் அழுத்தம்; மேடும், பள்ளமுமாக தெருக்கள்
குறைந்த மின் அழுத்தம்; மேடும், பள்ளமுமாக தெருக்கள்
குறைந்த மின் அழுத்தம்; மேடும், பள்ளமுமாக தெருக்கள்
குறைந்த மின் அழுத்தம்; மேடும், பள்ளமுமாக தெருக்கள்
ADDED : ஜூன் 14, 2024 04:09 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அன்பு நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் வருவதால் மின்சாதனங்கள் பழுது ஆவதாகவும், தெருக்களின் ரோடுகள் சேதம் அடைந்து நடக்க முடியாமல் இருப்பதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டை சேர்ந்தது அன்பு நகர். இதில் 10 தெருக்கள் உள்ளன. பல தெருக்களில் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. 10 வது தெருவில் ரோடு, வாறுகால் இல்லை. ஒட்டு மொத்த குப்பைகளை இங்கு தான் கொட்டுகின்றனர்.
கழிவுநீரும் குளம் போல் தேங்கியுள்ளது. பாம்புகள் அதிகமாக சுற்றி திரிவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அன்புநகரில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மின் சாதன பொருட்கள் பழுதாகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு, மின்வாரியம் புதிய டிரான்ஸ்பர் அமைத்தும் பயன் இல்லை.
ஜல்ஜீவன் திட்டத்திற்காக 9வது தெருவில் ரோட்டை தோண்டி பணிகள் முடிந்த பின் அப்படியே விட்டு விட்டனர். இதனால், மேடும் பள்ளமுமாக உள்ள ரோட்டில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தெருக்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடிக்க வருவதில்லை. 10 மற்றும் குறுக்கு தெருக்களில் ஜல் ஜீவன் திட்டம் துவங்கப்படவில்லை. இறைச்சி கழிவுகள், குப்பைகளை 10 வது தெருவின் கடைசி பகுதியில் கொட்டுவதால் சுகாதார கேடாக உள்ளது.
பல தெருக்களில் தெரு விளக்குகள் இல்லை. நெசவாளர் காலனி வழியாக அன்பு நகர் வரும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. டூ வீலர்களில் வர சிரமமாக உள்ளது. நகர் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.