/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த காதல் ஜோடி 5 மாதங்களுக்குபின் மீட்பு ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த காதல் ஜோடி 5 மாதங்களுக்குபின் மீட்பு
ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த காதல் ஜோடி 5 மாதங்களுக்குபின் மீட்பு
ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த காதல் ஜோடி 5 மாதங்களுக்குபின் மீட்பு
ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த காதல் ஜோடி 5 மாதங்களுக்குபின் மீட்பு
ADDED : ஜூன் 02, 2024 03:20 AM
சிவகாசி: சிவகாசி அருகே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த போது 5 மாதங்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பனும் 21, காதலித்து வந்தனர். இவர்கள் 2023 ஜன. ல் வீட்டை விட்டு வெளியேறியனர். டவுன் போலீசார் அவர்களை கண்டுபிடித்து மாரியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியை வீட்டில் ஒப்படைத்தனர்.
சிறுமியும் மாரியப்பனும் மீண்டும் 2023 டிச. ல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தனது மகளை மீட்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
டவுன் போலீசார், அவர்களின் அலைபேசி எண்ணை வைத்து சென்னை, மும்பையில் தேடி வந்தனர். தொடர்ந்து இருவரும் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்தபோது இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் மீட்டனர்.
சிறுமிக்கு மே 21 ல் 18 வயது பூர்த்தி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.