Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநுால்கள் பற்றாக்குறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநுால்கள் பற்றாக்குறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநுால்கள் பற்றாக்குறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநுால்கள் பற்றாக்குறை

ADDED : ஜூன் 12, 2024 06:06 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஒரு சில வகுப்புகளில் பாடநுால்கள் பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன் தினம் 1090 துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 228, உயர்நிலைப்பள்ளிகள் 150, மேல்நிலைப்பள்ளிகள் 246 என 1714 பள்ளிகள் திறக்கப்பட்டன.

2 லட்சத்து 26 ஆயிரத்து 154 அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறவியல், மேல்நிலை மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன.

இது தவிர அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு பாடப்பிரிவு பாடநுால்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு சில உதவி பெறும் பள்ளகளின் சில வகுப்புகளில் பாடநுால்கள் பற்றாக்குறை உள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். மேலும் வெளியே கடைகளில் வாங்க ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடைகளில் அதிக விலைக்கு இந்த பாடநுால்களை விற்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இது போன்ற சூழலால் அவதிப்படும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநுால் பற்றாக்குறை உள்ளதா என ஆராய்ந்து பள்ளி கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி கூறியதாவது: பற்றாக்குறை இருந்தால் தலைமை ஆசிரியர்கள் நிச்சயம் எங்களிடம் தெரிவித்திருப்பர். ஆனால் தற்போது வரை யாரும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு பற்றாக்குறை இருப்பது தெரிந்தால் உடனடியாக பாடநுால்களை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us