ADDED : ஜூலை 19, 2024 06:21 AM
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடந்த வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் துவங்கி வைத்தார். விசேஷசந்தி பூதசுத்தி காலயாக பூஜைகள் நடந்தது.
இதையடுத்து சொக்கநாத சுவாமி கோயில் அர்ச்சகர் நாரம்புநாத பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர பாண்டியன், மனோகர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் சங்க உறுப்பினர்கள் செய்தனர். கல்லுாரி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.