ADDED : ஜூலை 19, 2024 06:19 AM
சிவகாசி : திருத்தங்கலில் ரயோலா ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் 4 வது மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. போட்டியில் தமிழகமெங்கும் உள்ள 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளி பிளஸ் 1 மாணவி ஸ்ரீஹா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
9ம் வகுப்பு மாணவி ஷாமலா 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். மாணவிகளை பள்ளி தலைவர் சண்முகையா, முதல்வர் முத்துலட்சுமி, ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.