ADDED : ஜூலை 07, 2024 11:44 PM
ராஜபாளையம்: கொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி கைது செய்த ராஜபாளையம் போலீசாரை தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி உள்ளார்.
ராஜபாளையத்தில் பிப். 24ல் முருகானந்த் தம்பதியை கட்டி போட்டு ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேக நபரை பிடித்து விசாரணையில் மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவர் சம்பவத்திற்கு மூளையாக இருந்து மாநிலத்தின் 45க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளியான மூர்த்தி தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்து ரூ.84 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தையும், ரூ.4 கோடி மதிப்பிலான காட்டன் மில் வாங்கிய சொத்து ஆவணத்தை கைப்பற்றியுள்ளனர்.
கொலை வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.