Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கே.கரிசல்குளம் - புளியம்பட்டியில் குண்டாற்றில் தரைப்பாலம் அமையுமா

கே.கரிசல்குளம் - புளியம்பட்டியில் குண்டாற்றில் தரைப்பாலம் அமையுமா

கே.கரிசல்குளம் - புளியம்பட்டியில் குண்டாற்றில் தரைப்பாலம் அமையுமா

கே.கரிசல்குளம் - புளியம்பட்டியில் குண்டாற்றில் தரைப்பாலம் அமையுமா

ADDED : ஜூன் 07, 2024 04:37 AM


Google News
காரியாபட்டி: மல்லாங்கிணரிலிருந்து காரியாபட்டிக்கு எளிதில் செல்ல கே கரிசல்குளம்- புளியம்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லாங்கிணரிலிருந்து காரியாபட்டிக்கு கல்குறிச்சி வழியாக 13 கி.மீ., தூரம் உள்ளது. பெரியபுளியம்பட்டி, கே. கரிசல்குளம் வழியாக

7 கி.மீ., துாரம் தான். சுற்றி செல்வதால் நேரம், எரிபொருள் அதிகம் செலவாகிறது. மல்லாங்கிணரில் நடைபெறும் வாரச்சந்தை, அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றிக்கு இப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் டூவீலர்களில் பெரிய, சின்ன புளியம்பட்டி, கே. கரிசல்குளம் வழியாக சென்று வருகின்றனர்.

கே. கரிசல்குளம்- புளியம்பட்டி இடையே குண்டாறு செல்கிறது. மழை நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது செல்ல முடியாது. அதேபோல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. அருகில் உள்ள ஊர்களுக்கு கூட பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியிருக்கிறது. குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

பாலம் அமைக்கும் பட்சத்தில் மாந்தோப்பு வழியாக விருதுநகருக்கும், புளியம்பட்டி வழியாக கல்குறிச்சி, மல்லாங்கிணர், விருதுநகருக்கும் இப்பகுதி மக்கள் எளிதில் சென்று வர முடியும். நேரம் எரிபொருள் மிச்சமாகும். நீண்ட நாள் கோரிக்கையான குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us