/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'அணைகளை கட்டி விவசாயத்தை மேம்படுத்தியவர் காமராஜர்' தமிழருவி மணியன் பேச்சு 'அணைகளை கட்டி விவசாயத்தை மேம்படுத்தியவர் காமராஜர்' தமிழருவி மணியன் பேச்சு
'அணைகளை கட்டி விவசாயத்தை மேம்படுத்தியவர் காமராஜர்' தமிழருவி மணியன் பேச்சு
'அணைகளை கட்டி விவசாயத்தை மேம்படுத்தியவர் காமராஜர்' தமிழருவி மணியன் பேச்சு
'அணைகளை கட்டி விவசாயத்தை மேம்படுத்தியவர் காமராஜர்' தமிழருவி மணியன் பேச்சு
ADDED : ஜூலை 15, 2024 04:06 AM

விருதுநகர், : பிரதமராக இருந்த நேருவின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் முதல்வர் காமராஜ் என விருதுநகரில் காமராஜர்மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் காமராஜ் 122வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜ் பவன் டிரஸ்ட், விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேசியதாவது: தடுக்கி விழுந்தால் துவக்கப்பள்ளி, ஓடி விழுந்தால் உயர்நிலைப்பள்ளி என ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார் முன்னாள் முதல்வர் காமராஜ். பல தொழிற்சாலைகள் உருவாக காரணமாக இருந்தவர்.
தனியார் தொழிற்சாலைகள் பெருக வழிவகை செய்தவர். மத்திய அரசோடு மல்லுக்கட்டவில்லை. மாறாக பிரதமர் நேருவின் இதயத்தில் இடம் பிடித்தவர் காமராஜ்.
தமிழகத்தில் தொழில் பேட்டைகளை அமைத்தார். நீர், அனல் மின் சக்தி திட்டங்களை உருவாக்கினார். அணைகளை கட்டி வேளாண்மை மேம்படுத்தினார். பிரதமர் நேருவுக்கு பின் லால் பகதுார் சாஸ்திரி, இந்திராவை பிரதமராக்கியவர், என்றார்.