/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:52 PM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகியன செயல்படுத்தப்படுகிறது.
புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் 1.5 எக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ரூ.7 லட்சத்தில் 60 சதவீதமாக மானியமாக வழங்கப்படும்.
நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொது பிரிவில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ரூ.8 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் விருதுநகர் மீன்வளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
விவரங்களுக்கு 04562 - 244 707 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம், என்றார்.