/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையத்தில் மெத்தனமாக நடைபெறும் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல் ராஜபாளையத்தில் மெத்தனமாக நடைபெறும் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்
ராஜபாளையத்தில் மெத்தனமாக நடைபெறும் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்
ராஜபாளையத்தில் மெத்தனமாக நடைபெறும் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்
ராஜபாளையத்தில் மெத்தனமாக நடைபெறும் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2024 07:01 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோட்டில் மெத்தனமாக நடைபெற்று வரும் பாலப்பணிகளை விரைவுப்படுத்தவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக உள்ள டி.பி மில்ஸ் ரோட்டில் இரண்டு சாக்கடை தரைப்பாலங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தன.
ஒன்பது மாதங்களுக்கு முன் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கியும் தொடங்காமல் இருந்து வந்த நிலையில் 1 மாதத்திற்கு முன் பணிகள் தொடங்கின. பள்ளி திறப்பிற்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பழைய பாலங்களை அகற்றிய வேகத்தில் பணிகள் நடைபெறாததால் மலையடிப்பட்டிக்கு இணைப்பு இன்றி வாகன ஓட்டிகள் நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாணவர்கள் நிலை குறித்து அரசின் கவனத்திற்கு அரசியல் கட்சியினர், வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சந்திரன்: நகர்ப்புற நெரிசலுக்கு மாற்றாக இருந்த இந்த பைபாஸ் ரோடு முடக்கத்தால் மலையடிப்பட்டி, சத்திரப்பட்டி ரோட்டிற்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் நகர் பகுதி வழியே மேம்பாலம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சூழ்நிலை கருதி வேகமாக முடிக்க வேண்டிய பணிகள் தாமதத்தால் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருவதை கருதி மாவட்ட நிர்வாகம் பணிகளை துரிதப் படுத்த வலியுறுத்த வேண்டும்.