/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் --அபாய சங்கிலியை இழுத்தவர் குறித்து விசாரணை ரயிலில் --அபாய சங்கிலியை இழுத்தவர் குறித்து விசாரணை
ரயிலில் --அபாய சங்கிலியை இழுத்தவர் குறித்து விசாரணை
ரயிலில் --அபாய சங்கிலியை இழுத்தவர் குறித்து விசாரணை
ரயிலில் --அபாய சங்கிலியை இழுத்தவர் குறித்து விசாரணை
ADDED : ஜூன் 11, 2024 09:14 PM
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தியதால் 25 நிமிடம் தாமதத்துடன் புறப்பட்டது.
சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 5:58 க்கு ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. பயணிகளை இறக்கி விட்டு 4 நிமிடங்களுக்கு பின் பயணத்தை தொடர்ந்த நிலையில் சத்திரப்பட்டி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே அபாய சங்கிலி இழுத்ததால் நின்றது.
கார்டு இறங்கி சோதனை செய்தார். அப்போது இன்ஜினுக்கு அடுத்த பொது பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது தெரியவந்தது. பயணிகளிடம் விசாரித்ததில் சங்கிலியை இழுந்த இளைஞர் ஒருவர் இறங்கி ஓடியதாக கூறினர். 25 நிமிட நேர தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டது.
அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.